எம்ஜிஆர் திரைப்படக் கல்லூ ரிக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.13.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள் ளதாக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.
சட்டப்பேரவையில் செய்தி, எழுதுபொருள், அச்சுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடந்தது. இதற்கு பதில் அளித்து செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது:
அரசின் திட்டங்களை விளக்கும் முகம்பார்க்கும் கண்ணாடியாக செய்தித் துறை விளங்குகிறது. பத்திரிகையாளர் மாத ஓய்வூதியம் 3 முறை உயர்த்தப்பட்டு தற் போது ரூ.8 ஆயிரமாக வழங்கப் படுகிறது. ஓய்வூதியம் பெற பணிக்கொடை உச்சவரம்பு மற்றும் பணியில் இருந்தபோது பெற்ற ஆண்டு வருமானமும் ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத் துக்கு ரூ.13.55 கோடி நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. திருட்டு விசிடி தயாரித்து விற்ற 12,705 பேர் கடந்த 5 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.83.28 லட்சம் மதிப் புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் 10 மாவட்ட தலைநகரங்களில் அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்படுகின் றன. இதில் மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி, வேலூர் ஆகிய 6 மாவட்ட தலைநகரங் களில் பொருட்காட்சிகள் ஆண்டு தோறும் நடத்தப்படும். மற்ற 4 மாவட்டங்களின் தலைநகரங் களில் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் பொருட்காட்சிகள் நடத்தப்படும். அரசு பொருட்காட்சி களில் ரூ.20 லட்சம் மதிப்பில் எல்இடி மின் விளக்குப் பலகைகள் அமைக் கப்படும்.
சென்னை மாநிலச் செய்தி நிலைய நூலகத்தில் உள்ள பல்வேறு துறைகள் சார்ந்த 50 ஆயிரம் நூல்களை கணினி யில் பதிவு செய்து, எளிதாக தேடி எடுப்பதற்கான மென் பொருள் ரூ.10.50 லட்சத்தில் பொருத்தப் படும். நாட்டுக்காக, மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள், தமிழுக்கு தொண்டாற்றியவர்களுக்கு மணி மண்டபம், நினைவுச் சின்னங் கள் அமைக்கப்பட்டு வருகின் றன. தமிழகத்தில் உள்ள 14 மணிமண்டபங்கள், நினைவகங் கள் மற்றும் கலைவாணர் அரங்கம் நவீன முறையில் 360 டிகிரி கோணத்தில் படம் எடுத்து அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
அரசு அலுவலகங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை சீரிய முறையில் வடிவமைக்க நவீன சிறப்புப் புத்தகம் கட்டும் இயந்திரம் ரூ.60 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும். திருச்சி அரசு கிளை அச்சகத்தில் அச்சுப்பிரதிகளில் பக்க எண்கள் இடுவதற்கு, டிஜிட்டல் எண்கள் இடும் இயந்திரம் ரூ.21 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும். சென்னை அரசு மைய அச்சகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அச்சுப் பணிகளை மேற்கொள்ள ரூ.3.60 லட்சம் செலவில் பன்முக அச்சுப்பொறி வாங்கப்படும். எழுது பொருள் அச்சுத் துறை இயக்ககம், எழுதுபொருள் கிடங்கு, அச்சகங் களில் மின்கசிவால் ஏற்படும் தீ விபத்துகளைத் தவிர்க்க ரூ.48 லட்சத்தில் மின் வசதிகள் புதுப்பிக் கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.