வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக நாகை மாவட்டம் திருப்பூண்டியில் 14.2 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ள நிலையில் வடகிழக்கு பருவமழையும் தமிழகத்தில் தொடங்கியது. இதனால் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதுவரை வயல்களில் களையெடுக்காத, உரம் போடாத விவசாயிகள் இந்த மழை நீரைக் கொண்டு இப்போது அந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை வரை பெய்த மழையளவில் அதிகபட்சமாக நாகை மாவட் டம் திருப்பூண்டியில் 14.2 செ.மீட்டர் மழை பதிவானது. இன்னும் மழை நீடிக்கும் என்பதால் இந்த மழையளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.