சென்னை ராஜா அண்ணா மலைபுரம் கிரசென்ட் அவென்யூ வில் பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தின் வீடு உள்ளது. இங்கு அவர் தனது மனைவியும் நடிகையு மான சுகாசினியுடன் வசித்து வருகிறார்.
தனது வீட்டு வளாகத்துக்குள் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற பட நிறுவனத்தின் அலுவலகத்தை நடத்தி வருகிறார். இங்கு டப்பிங் தியேட்டரும் உள்ளது. நேற்று மதியம் இங்கு திடீரென தீ பற்றிக் கொண்டது. இதைக் கண்டு சுகாசினி அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். தேனாம்பேட்டையில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த ஸ்பீக்கர், டப்பிங்கின்போது பயன்படுத்தும் தொழில் நுட்ப பொருட்கள், லைட்டுகள் என பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் சேதம் அடைந்தன.
இதுகுறித்து, மணிரத்னம் சார்பில் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக் கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்குமோ என போலீஸார் விசாரித்து வருகின்றனர். சேத மதிப்பு ரூ.40 லட்சம் வரை இருக்கலாம் என தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.