தமிழகம்

தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 24 பேரின் காவலை 3-வது முறையாக நீட்டித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 24 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து, அனைவரும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை நவ. 7-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, இந்த மீனவர்களுக்கு 3-வது காவல் நீட்டிப்பு. இதைத்தொடர்ந்து, மீனவர்கள் 24 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT