தமிழகம்

காவிரி ஆற்றுப் படுகையில் ஷேல் காஸ் எடுக்க தடை கோரி மனு: ஓஎன்ஜிசி பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

செய்திப்பிரிவு

காவிரி ஆற்றுப் படுகையில் ஷேல் காஸ் எடுப்பது குறித்த முறை யீட்டின் போது ஓஎன்ஜிசி பதில் அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டி யன், காவிரி பாசன குத்தகை விவ சாயிகள் சங்கத் தலைவர் ஆர்.முருகன் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் தனித்தனியே தாக் கல் செய்திருந்த மனுக்களில் கூறியி ருப்பதாவது:

ஓஎன்ஜிசி கடந்த 35 ஆண்டு களாக காவிரி ஆற்றுப் படுகையில் மேற்கொண்டு வரும் திட்டங்களால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, விவ சாயம் குறைந்துவிட்டது.

இந்நிலையில் மத்திய பெட்ரோ லியத் துறை அமைச்சகம், அறிவி யல்பூர்வமாக எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமல், ஷேல் காஸ் எடுப்பதற்கு ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதியை வழங்குவதற்கான கொள்கை விதிகளை கடந்த 2013-ல் வெளி யிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஓஎன்ஜிசி கடந்த ஜூனில், பல்வேறு அரசுத் துறைகளின் அனுமதி யின்றி, காவிரி ஆற்றுப் படுகை யில் ஷேல் காஸ் எடுப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகளைத் தொடங் கியுள்ளது. மீத்தேன் மற்றும் ஷேல் காஸ் ஆகியவை ஒரே மாதிரியான தொழில்நுட்பத்தில்தான் எடுக்கப் படுகின்றன.

தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி ஆற்றுப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ஆய்வு செய்ய தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்தது. அக்குழுவின் அறிக்கையில் கூறப் பட்டுள்ள காரணங்களின் அடிப் படையில், அத்திட்டத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. அந்த காரணங் கள் ஷேல் காஸ் திட்டத்துக்கும் பொருந்தும். எனவே காவிரி ஆற்றுப் படுகையில் ஷேல் காஸ் எடுக்க ஓஎன்ஜிசி மேற்கொண்டு வரும் ஆரம்பக் கட்ட பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஓஎன்ஜிசி இதுநாள் வரை செய்து வந்த பணி களை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் தாக்கத்தை அறிய வேண்டும்.

இவ்வாறு மனுதாரர்கள் கோரி யிருந்தனர்.

இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகி யோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

அப்போது பி.ஆர்.பாண்டியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன், ஆர்.முருகன் தரப்பில் ஆஜரான மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர், ஓஎன்ஜிசியின் ஆரம்பக் கட்ட பணிகளுக்கு இடைக்காலத் தடை கோரினர். பின்னர் அமர்வின் உறுப்பினர்கள், இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக ஓஎன்ஜிசி, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உள்ளிட்ட எதிர் மனு தாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT