`தி இந்து எஜுகேஷன் பிளஸ்' உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் (வெள்ளி, சனி) நடக்கிறது.
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழ கம், பாரத் பல்கலைக்கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும் இந்த வழிகாட்டி நிகழ்ச்சியை கஸ்தூரி அண்ட் சன்ஸ் சேர்மன் என்.ராம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை யில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி யில் மணிபால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் நிறுவனத் தலைவர் டி.வி.மோகன்தாஸ் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். தொடக்கவிழாவைத் தொடர்ந்து மருத்துவத் துறை வேலைவாய்ப்புகள் குறித்து `சைமெட்' நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் ராமச்சந்திரனும், பொறியியல் வேலைவாய்ப்புகள் பற்றி கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியும் உரையாற்றுகிறார்கள்.
பிற்பகல் 3 மணிக்கு, புதிய ஐ.ஐ.டி. நிறுவனங்கள் குறித்து சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் டேவிட் கோயில்பிள்ளையும், பொறி யியல் துறையில் புதிய கண்டு பிடிப்புகள் பற்றி ஐ.ஐ.டி. பேராசிரியர் அசோக்கும் பேசுகிறார்கள். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் கல்வி கண்காட்சியில், பொறியியல் கல்லூரிகள், நிர்வாக வியல் கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து, அனி மேஷன் தொடர்பான அரங்குகள் இடம்பெறும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.
நிகழ்ச்சியை ஒட்டி நடத்தப்படும் இலவச உளவியல் தேர்வில் (சைக்கோமெட்ரிக் டெஸ்ட்) 9- ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். இதற்கு www.bodhi.co.in என்ற இணையதளத்தில் பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். சனிக்கிழமை நிகழ்ச்சி முடிவடையும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பெற்றோ ருக்கும் இந்த நிகழ்ச்சி மிகவும் உதவிகரமாக இருக்கும்.