அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள் அறியும் வண்ணம் கல்லூரிகளில் படக்காட்சி நடத்த வேண்டும் என மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார்.
தமிழக செய்தி, மக்கள் தொடர்புத்துறை சார்பில் மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக்கூட்டம் மற்றும் பயிற்சி வகுப்பு கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் செய்தித்துறை அமைச் சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், அரசின் அனைத்து துறைகளின் திட்டங்கள் குறித்தும் அறிந்து வைத்திருக்க வேண்டும். மாவட்டங்களில் உள்ள நாளிதழ்கள், தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்பட நிபுணர்களுடன் நல்ல நட்புறவு கொள்ள வேண்டும். அரசின் அறிவிப்புகள், செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
அரசின் திட்டங்களைக் கிராம மக்களிடையே கொண்டு சேர்க்க வசதியாக வேறு எந்த மாநிலத் திலும் இல்லாத வகையில் தமி ழகத்தில் எல்இடி திரை கொண்ட வேன்கள் இயக்கப்படுகின்றன. அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள் அறிந்துகொள்ளும் வண்ணம் மாலை வேளையில் கல்லூரிகளில் படக்காட்சி நடத்த வேண்டும். குறைந்தபட்சம் 2 புகைப் பட கண்காட்சி நடத்த வேண்டும். அதேபோல மாதந்தோறும் ஏதேனும் ஒரு துறையைத் தேர்வு செய்து, மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் செய்தியாளர் பயணம் மேற்கொள்ள வேண்டும். கண்டிப்பாக அனைத்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களும் இதை மேற்கொள்ள வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் செய்தி ஊடகங்கள் மிக விரைவாக செயல்பட்டு வருவதால், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களும் விரைவாக பணி செய்ய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில் செய்தித்துறை செய லாளர் இரா.வெங்கடேசன், இயக் குநர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் இயக்குநர்கள் எஸ்.பி.எழிலழகன், உல.ரவீந்திரன், இணை இயக் குநர்கள் சரவணன். கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.