பாஜக மாநிலத் தலைவர் எஸ்.தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கடந்த ஆண்டு பொங்கல் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு நடக்காதது இளைஞர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. வரும் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்தை கருணாநிதி விமர்சிக்கிறார். இக்கல்வித் திட்டத்தில் மதச்சாயம் இருக்காது. அறிவு சார்ந்ததாகவே இருக்கும். குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மணிமண்டபம் உலகத்தரம் வாய்ந்ததாக அமைக்கப்படும். விரைவில் நடக்க உள்ள அவரது முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்போம். தேர்தல் நெருங்கும்போது இது குறித்து பேசுவோம் என்றார்.