சென்னை பட்டினப்பாக்கத்தில் வேக மாக சென்ற சொகுசு கார், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர், அவரது மனைவி உடல் கருகி உயிரிழந்தனர்.
தமிழகத்தை சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் (31). இவரது மனைவி நிவேதா (26), போரூரில் உள்ள மருத் துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவர்கள் சென்னை ஆலப்பாக்கம் அஷ்ட லட்சுமி நகரில் வசித்துவந்தனர்.
இருவரும் நேற்று முன்தினம் இரவு சொகுசு காரில் பட்டினப்பாக்கம் சென்றனர். பின்னர், எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, அடையாறு சென்றனர். பிறகு, நேற்று அதிகாலை 2 மணி அளவில் பட்டினப்பாக்கம் நோக்கிச் செல்லும் டிஜிஎஸ் தினகரன் சாலையில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை அஸ்வின் சுந்தர் ஓட்டினார். நிவேதா முன் இருக்கையில் இருந்தார்.
பட்டினப்பாக்கம் அம்பேத்கர் மணிமண்டபம் அருகே வேகமாக சென்ற கார், வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக பாய்ந்த கார், இடதுபுறத்தில் சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது. அடுத்த கணம், காரின் பெட்ரோல் டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. குபீரென தீப்பற்றியதில், கார் கொழுந்துவிட்டு எரிந்தது.
நள்ளிரவு நேரம் என்பதால் மக் கள் நடமாட்டம், வாகனப் போக்கு வரத்து அவ்வளவாக இல்லை. கார் தீப்பிடித்து எரிவதைப் பார்த்து அருகே இருந்த ஒருசிலர் ஓடிவந் தனர். காருக்குள் சிக்கியிருந்த அஸ்வின் சுந்தர், நிவேதா இருவரும் கார் கண்ணாடியைத் தட்டி காப்பாற்றுமாறு கூறியுள்ளனர். அருகே இருந்தவர்கள் மண்ணைக் கொட்டி தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், முடியவில்லை. நேரம் ஆகஆக கார் முழுவதும் இன்னும் வேகமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது.
உடனடியாக இதுபற்றி தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். சிறிது நேரத்தில் மயிலாப்பூர், தேனாம்பேட்டையில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்த பிறகு, இருவரையும் மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
கார் கதவை திறக்க முடியாத தால், கடப்பாரையால் உடைத்தனர். உள்ளே அஸ்வின் சுந்தர், நிவேதா இருவரும் தீயில் முழுவதுமாக கருகிய நிலையில், கார் இருக்கை யிலேயே சடலமாக கிடந்தனர். இதையடுத்து, அவர்களது உடல் கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோ தனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டன. இதற்கிடையில், தகவல் அறிந்து அஸ்வின் சுந்தரின் நண்பர் களும், சக கார் பந்தய வீரர்களும் சம்பவ இடத்திலும், மருத்துவமனை யிலும் குவிந்தனர். பிரேதப் பரி சோதனை முடிந்து, இருவரது உடல்களும் உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டன.
விபத்து நடந்தது எப்படி?
நள்ளிரவு நேரம் என்பதால் சாலையில் வாகனப் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. இதனால், அஸ்வின் சுந்தர், நிவேதா தம்பதியர் காரில் வேகமாக சென்றுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் பள்ளிகள் இருப்பதால் அப்பகுதியில் வேகத்தடை உள்ளது. அதை கவனிக்காமல் சிறிய வளைவை வேகமாக கடந்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியுள்ளது.
அவர்கள் சென்ற கார், இருவர் மட்டுமே செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட சொகுசு கார் ஆகும். அசம்பாவிதம் ஏற்படும் போது தானாக விரியக்கூடிய 6 பலூன்களும் சரியாக விரிந்துள் ளன. அதனால், இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. அதே நேரம், அசம்பாவித தருணங்களில் கதவு திறந்துகொள்வதை தவிர்ப் பதற்காக, தானாக ‘லாக்’ ஆகும் வசதி அந்த காரில் உள்ளது. இவ் வாறு கதவு ‘லாக்’ ஆனதால், அவர் களாலும் திறக்க முடியவில்லை. வெளியே இருந்தவர்களாலும் திறக்க முடியவில்லை. தவிர, காரின் உள்பகுதியிலும் தீ பரவியதில், அவர்களது உயிரைக் காப்பாற்றிய பலூன்களும் தீப்பிடித்து எரிந் துள்ளன. இதனால்தான், அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அடை யாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அஸ்வின் சுந்தரின் வெற்றிகள்
சுமார் 18 வயதில் இருந்தே பல் வேறு கார் பந்தயப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளை குவித்தவர் அஸ்வின் சுந்தர். 2003, 2004-ல் எம்ஆர்எப் பார்முலா போட்டி யில் தேசிய சாம்பியன், 2005-ல் பார்முலா எப்ஐஎஸ்எஸ்எம்இ 800 சிசி, 1000 சிசி பிரிவில் சாம்பியன், 2006-ல் தேசிய ரேஸிங் சாம்பியன், ‘சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ்’ பட்டம், ஆசிய அளவில் 21 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2-வது இடம், 2007, 2009-ல் பார்முலா போட்டியில் சாம்பியன், 2010, 2011-ல் எம்ஆர்எப் பார்முலா 1600 சர்வதேச சாம்பியன், 2012, 2013-ல் தேசிய எஃப் 4 சாம்பியன் என பல வெற்றிகளைக் குவித்துள்ளார். இவர் நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குடும்ப பின்னணி
அஸ்வின் சுந்தர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் சுந்தர் - லதா. இவர்கள் தனியார் போக்குவரத்து நிறுவனம் நடத்தி வந்தனர். அஸ்வின் சுந்தரின் கார் பந்தயக் கனவு காரணமாகவே சென்னையில் குடியேறினர். இங்கும் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அஸ்வின் சுந்தரின் மனைவி நிவேதா, போரூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து, அங்கேயே மருத்துவராக பணி செய்துவந்தார். இவர் இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் குமரன் - சகிலா தம்பதியின் மகள். இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத் துடன் கடந்த 2016 பிப்ரவரி 14-ம் தேதி திருமணம் செய்துள்ளனர். திருமணம் செய்து ஓராண்டு மட்டுமே முடிந்த நிலையில், இளம் தம்பதியர் கார் விபத்தில் உடல் கருகி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.