தமிழகம்

மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், மஞ்சளாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்காக நாளை முதல் (டிச.27) தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஜெயல்லிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: தேனி மாவட்டம், மஞ்சளாறு அணையிலிருந்து தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி, விவசாயிகளிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடிமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல்போக சாகுபடி பாசனத்திற்காக 27.12.2013 முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

இதனால், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள சுமார் 5,259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT