தமிழகம்

சென்னை: தீபாவளி திருடர்களைப் பிடிக்க தி.நகரில் நவீன கண்காணிப்பு கேமரா

செய்திப்பிரிவு

தீபாவளி திருடர்களைப் பிடிப்ப தற்காக தி.நகர், புரசைவாக்கம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் பொருத்தியுள்ளனர். கூட்டத்துக்குள் திருடர்கள் ஊடுருவினால் உடனடியாக கேமரா காட்டிக் கொடுத்துவிடும்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் புதிய துணிகள் எடுக்கவும், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க வும் தி.நகருக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் உஸ்மான் சாலை, ரங்கநாதன் சாலை, பாண்டி பஜார் பகுதிகளில் கூட்டம் அலை மோதுகிறது.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் திருடர்கள் கைவரிசை காட்டுவார்கள். அவர்களை கண்காணித்து பிடிக்க மாநகர போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தி.நகர் பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் சுமார் 20 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். பிக்பாக்கெட் மற்றும் திருட்டுக் குற்றங்களில் தொடர்பு உடைய 200-க்கும் மேற்பட்ட பழைய குற்றவாளிகளின் படங்கள், கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்தக் குற்றவாளிகளில் யாரேனும் தீபாவளிக் கூட்டத்தில் ஊடுருவினால், கண்காணிப்பு கேமராக்களின் பார்வையில் அவர்கள் சிக்குவார்கள். உடனடியாக அவர்கள் குறித்து கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினிகளில் எச்சரிக்கை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் புரசைவாக்கம் பகுதியிலும் சுமார் 6 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சாதாரண உடைகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தி.நகர் பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இந்த பகுதியில் சுமார் 20 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT