தமிழகம்

சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் அதிமுக அரசு தோல்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் அதிமுக அரசு தோல்வி அடைந்து விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மார்க்சிஸ்ட் மாநில குழுக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவல கத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், உ.வாசுகி, பி.சம்பத், கே.பால கிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப் பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு, வழிப் பறி, பெண்கள், குழந்தைகள் கடத்தல் மற்றும் பாலியல் வன் முறைகள் நாளுக்கு நாள் அதி கரித்துக் கொண்டுள்ளன.

நுங்கம்பாக்கம் ரயில் நிலை யத்தில் சுவாதி என்ற இளம் பெண் பொறியாளர் பட்டப் பகலில் படுகொலை செய்யப் பட்டுள்ளது அனைவரது ரத்தத் தையும் உறையச் செய்துள்ளது. கிருஷ்ணகிரியில் கொலை யாளியை பிடிக்கச் சென்ற காவலர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சட்டம் - ஒழுங்கு பிரச் சினைக்கு தீர்வு காண அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கூலிப்படையினர் மற்றும் சமூக விரோதச் செயல் களை கட்டுப்படுத்த இரவு நேர காவல் கண்காணிப்பை அதிகப் படுத்துதல், மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கண் காணிப்பு கேமராக்கள், குற்றவாளி களை உடனுக்குடன் கைது செய்து தண்டனை கிடைக்கச் செய்தல் போன்ற நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.

திண்டிவனம் செயின்ட் பிலோமினா பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் தலித் மாணவி கழுத் தறுக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து விவரம் அறியச் சென்ற இந்திய மாணவர் சங்கத்தின் 13 மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை மார்க்சிஸ்ட் மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட மாணவர் களை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT