தமிழக பிரச்சினைகளை தீர்க்காத மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 3-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவ சாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் தெய்வ சிகாமணி தெரி வித்துள்ளார். இதுகுறித்து ஈரோட் டில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சியால் மக்கள் கடும் பாதிப்பு களை சந்தித்து வருகிறார்கள். தமிழக விவசாயிகள் பயனடையும் வகையில் எவ்வித கடன் தள்ளு படியையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.
ஆனால், உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் தேசிய வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய் யப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. தமிழர் விரோதப் போக்கு மற்றும் தமிழக விரோத போக்கை மத்திய அரசு தொடர்ந்து கடைபிடித்து வருவது கண்டனத்துக்குரியது.
வறட்சி நிவாரணம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீனவர் பிரச் சினை உள்ளிட்ட தமிழக பிரச்சி னைகளில் மத்திய அரசு பாரா முகமாக இருந்து வருகிறது. தமிழகத்தின் மீதும், தமிழக விவ சாயிகள் மீதும் விரோதப் போக்கை கடைபிடித்து வரும் மத்திய அரசை கண்டித்து ஏப்ரல் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் விவ சாயிகள் கூட்டியக்கம் சார்பில் ‘பந்த்’ நடத்த முடிவு செய்துள் ளோம்.
எங்களது போராட்டம் முழுவ தும் மத்திய அரசுக்கு எதிரானதாக இருக்கும். ஆதரவு கோரி வணி கர் சங்கங்கள் உட்பட அனைத்து அமைப்புகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.