தமிழகம்

பொங்கலுக்காக ஊரப்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம்

செய்திப்பிரிவு

பொங்கல் பண்டிகையின்போது தென் மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்களுக்கென, ஊரப்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக, தமிழக அரசு சார்பில் 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தவிர பிற மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து 6,423 சிறப்பு பேருந்துகள் செல்கின்றன.

சென்னை புறநகர் பகுதிகளில் பெருமளவில் வசிக்கும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படுகின்றன. தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பஸ் நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் முன்பதிவு செய்த பயணிகள் ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்று அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்துக்கு பஸ்களில் பயணம் செய்ய வேண்டும். இதற்காக தற்காலிகமாக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்துக்கு செல்ல மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

SCROLL FOR NEXT