பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத் தில் வெள்ள நிவாரண சேலைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரியும் ஊழியர்களும், சேவை கோரி வரும் பொது மக்களும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.
பெரம்பூர் தாலுகா அலுவலகம், பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. இந்த தாலுகாவில் பெரம்பூர், மூலக்கடை, கொடுங்கையூர், சேல வாயல், எருக்கஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வருகின்றன.
இந்த அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தினந்தோறும் ஜாதிச் சான்று, ஓபிசி சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் மற்றும் தாலிக்கு தங்கம், மாற்றுத் திறனாளி கள் நலன், முதியோர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலதிட்ட சேவை கோரி தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அந்த அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.
சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத் தின்போது, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்குவதற்கான வேட்டி சேலைகள், காலதாமத மாக வந்ததாக கூறப்படுகிறது. அவை 100-க்கும் மேற்பட்ட பெரிய மூட்டைகளில் வட்டாட்சி யர் அலுவலகத்தின் இரு அடுக்கு களிலும் வைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது, அலுவலக அறைகளிலும் மூட்டைகள் வைக் கப்பட்டுள்ளன.
இதனால் ஊழியர்கள், குகைக் குள் செல்வது போன்று அலு வலகத்துக்குள் செல்லவேண்டி உள்ளது. அதிக அளவில் வரும் பொதுமக்களும் எளிதில் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் ஊழியர்களும், பணி யாளர்களும் அவதிப்பட்டு வரு கின்றனர்.
தாலுகா அலுவலகத்துக்கு வந்திருந்த பெரம்பூரைச் சேர்ந்த சங்கர் என்பவர் இதுபற்றி கூறும் போது, “இந்த அலுவலகத்தில் கடந்த 8 மாதங்களாக மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அலுவலகத்துக்குள் செல்ல முடிய வில்லை. மீறி நுழைந்து சென்றா லும் மூட்டைகள் மீது படிந்துள்ள தூசுகள், ஆடைகளை அழுக் காக்கி விடுகின்றன. அதனால் அந்த அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ள துணி மூட்டைகளை அப் புறப்படுத்த வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக அங்கு பணிபுரியும் அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, “போதிய இடம் இல்லாத காரணத்தால், எங்களி டம் வழங்கப்பட்ட துணிகளை, இங்கேயே போட்டு வைத்திருக் கிறோம். இது பணியாளர்களுக் கும், பொதுமக்களுக்கும் இடை யூறை ஏற்படுத்துகிறது. அந்த துணிகளை என்ன செய்வது என்பது குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து எந்த உத்தரவும் வரவில்லை” என்றார்.