சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப். 18-ம் தேதி நடந்த சம் பவம் ஒட்டுமொத்த ஜனநாயகத்தை யும் குழிதோண்டி புதைத்து விட்டது.
அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது வாகனங்களின் முகப்பில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் புகைப்படத்தை அனைவரும் பார்க்கும் வகையில் வைத்து வலம் வருகின்றனர். இதேபோல் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்கும்போதும் அந்த அறையில் ஜெயலலிதாவின் புகைப் படம் இருந்தது. இது அரசிய லமைப்பு சட்டத்தின் மாண்புகளுக்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிராக ஒரு குற்றவாளியின் புகைப்படம் அரசு அலுவலகங்களை அலங்கரிப் பது கடுமையான குற்றம். இது சரி யென்றால் நாளைக்கே தீவிரவாதி அஜ்மல் கசாப்பின் புகைப்படத்தை ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் வைப்பார்கள். அல்லது மற்றொரு தண்டனை கைதியான சசிகலாவி்ன் புகைப்படம் தமிழக அரசு அலுவலகங்களை அலங்கரிக்கும். இதை அனுமதிக்க முடியுமா?
122 எம்எல்ஏக்களும் சுதந்திர மாக வாக்களிக்க முடியாது என்பதால்தான் எதிர்கட்சியினரும், அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் ரகசிய வாக் கெடுப்பு நடத்தக் கோரினர். ஆனால் அதற்கு சபாநாயகர் செவி சாய்க்க வில்லை. அன்றைய தினம் சபாநாய கரின் செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
சபாநாயகர் அனைவருக்கும் பொதுவானவர் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் அன்றைய தினம் அவர் ஆளுங்கட்சி ஆதரவாளர் போல ஒருதலைபட்சமாக செயல்பட்டார்.
அவை நிகழ்வுகளை பதிவு செய்ய ஜெயா ப்ளஸ் டிவிக்கு மட்டும் அனுமதியளித்தது எப்படி? ரகசிய வாக்கெடுப்பு என்ற கோரிக்கையை சபாநாயகரால் ஏன் ஏற்க முடியவில்லை? கர்நாடக சிறையில் உள்ள சசிகலாவி்டம் இருந்து போன் அழைப்பு வந்த பிறகே அவையை சபாநாயகர் ஒத்திவைத்தாரா? சபாநாயகர் மற்றும் எதிர்கட்சித் தலைவரின் சட்டை கிழிந்தது எப்படி? இந்த கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்தி, தடயவியல் சோதனை நடத்த வேண்டும்.
எனவே ஆளுநர் உடனடியாக எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக நான் ஆளுநரின் செய லாளர், இந்திய தலைமை தேர்தல் ஆணையர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். சட்டப் பேரவையில் நடந்த நிகழ்வுகளின் சிசிடிவி ஆதாரங்களை வைத்து அத்துமீறி நடந்தவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும். தண்டனை குற்றவாளியின் படத்தை வைத்து ஆட்சி புரியும் ஆளுங்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்து, அதன்பிறகு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதியின் மேற்பார்வையில் அனைத்து உறுப்பினர்களையும் பங்கேற்க வைத்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ஜி. ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் தொடர்ந்த வழக்குகளுடன் இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் எனக்கூறி விசாரணையை பிப். 27-க்கு தள்ளி வைத்தனர்.