தமிழகம்

கோடநாடு எஸ்டேட் விவகாரம்: நீடிக்கும் மர்மங்களுக்கு விடை என்ன? - சசிகலாவிடம் விசாரணை நடத்தக் கோரும் மக்கள்

ஆர்.டி.சிவசங்கர்

ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக பல்வேறு மர்மங்களுக்கு விடை கிடைக்கவில்லை. இந்நிலையில், சசிகலாவிடம் விசாரணை நடத்தப் பட்டால்தான் கொள்ளை போன தங்கம், வைர கற்கள் குறித்து தெரியவரும் என கோடநாடு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாட் டில் முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த மாதம் 24-ம் தேதி அதிகாலை புகுந்த கொள்ளையர்கள், காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து, பங்களாவில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டனர்.

முதல்கட்ட விசாரணையில், இது கொள்ளை முயற்சிதான், பொருட்கள் ஏதும் கொள்ளையடிக்கப்படவில்லை என போலீஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளையில் 11 பேர் ஈடுபட்டனர். பங்களாவில் இருந்து கடிகாரங்கள் மற்றும் அலங்கார பொருள் கொள்ளை அடிக்கப்பட்டதாக வும், கடிகாரங்களை கேரளாவில் உள்ள ஆற்றில் கொள்ளையர்கள் வீசிவிட்டதாகவும், அலங்கார பொருள் மீட்கப்பட்டதாகவும் தெரி விக்கப்பட்டது.

இந்நிலையில், கொள்ளை போன தாகக் கூறப்பட்ட கடிகாரங்கள் மற் றும் அலங்கார பொருளின் புகைப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அதில், சாதாரண கைக்கடிகாரங்களே இருந்தன. ஆற்றில் வீசப்பட்ட கடிகாரங்கள் அவை தானா?, அவைதான் கொள்ளையடிக்கப்பட்டவையா? என்ற சந்தேகங்கள் எழுந்தன.

இந்நிலையில், பங்களாவில் இருந்து பணம், நகை, ஆவணங்கள் மற்றும் ஜெயலலிதாவின் உயில் ஆகியவை கொள்ளை போனதாக வேறு தகவல்களும் வெளியாகி மக் களை அதிர்ச்சியடையச் செய்தன.

இது தொடர்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, கோவை மண்டல டிஐஜிக்கு அறிக்கை அளித்துள்ளார். கோடநாடு பங்களாவில் இருந்து தங்கம் மற்றும் வைர கற்கள் கொள்ளை போயுள்ளதாகவும், ஆனால் எவ்வ ளவு என்பது தெரியவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கோடநாடு பங்களாவில் உள்ள பொருட்கள் குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசி கலாவுக்கு மட்டுமே தெரியும் என் கின்றனர் எஸ்டேட் தொழிலாளர்கள்.

இதில், ஜெயலலிதா உயிரிழந் துள்ள நிலையில், சசிகலாவிடம் விசாரித்தால் மட்டுமே கொள்ளை போன பொருட்கள் குறித்து தெரிய வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் முழுவதையும் சசிகலாவின் விசுவாசியான மேலாளர் நடராஜ் கவனித்து வருகிறார். எஸ்டேட்டில் உள்ள பொருட்கள் குறித்து அவரி டம் சசிகலா கூறியிருக்கலாம். எனவே, நடராஜிடம் விசாரணை நடத்தப்பட் டால் கொள்ளை போன பொருட்கள் குறித்து தெளிவு கிடைக்கும்.

ஏற்கெனவே, கடந்த பல மாதங் களுக்கு முன்பு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்ததாகவும், அதை தனது அதிகார பலத்தால் மேலாளர் நடராஜ் மூடி மறைத்து விட்டதாகவும் அப்போதே, கொள்ளை முயற்சி குறித்து விசாரித் திருந்தால், தற்போது நடந்த கொலையை தவிர்த்திருக்க முடியும் என்றும் குமுறுகின்றனர் எஸ்டேட் தொழிலாளர்கள்.

SCROLL FOR NEXT