யாருடைய ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடந் தது என்று சட்டப்பேரவையில் அதிமுக திமுக உறுப்பினர்கள் இடையே நேற்று வாக்குவாதம் நடந்தது.
சட்டப்பேரவையில் நேற்று உள் ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது நடந்த விவாதம்:
மா.சுப்பிரமணியன் (திமுக):
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் உள்ளாட்சித் துறை அமைச் சராக இருந்தபோதுதான் இரு சமூகங்கள் இடையே இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் ஊராட்சித் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:
பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சித் தலைவர் தேர்தலை நடத்த 1991-1996, 2001-2006 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப் பட்டன. பலமுறை தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு ஊராட் சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட் டார். பின்னர் அவர்கள் ராஜினாமா செய்தனர். அதிமுக அரசு எடுத்த தொடர் முயற்சிகளால்தான் 2006-ல் திமுகவால் அங்கு தேர்தல் நடத்த முடிந்தது.
அமைச்சர் திண்டுக்கல் சீனி வாசன்:
பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடத்த திமுக ஆட்சி யில்தான் நடவடிக்கை எடுக்கப் பட்டது என்பதுபோல மா.சுப்பிர மணியன் பேசினார். நான் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த போது முதல்வர் ஜெயலலிதா உத் தரவின்பேரில் அங்கு தேர்தல் நடத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அமைச்சர் வேலுமணி:
கடந்த 2006 திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், 2011 அதிமுக ஆட்சியில் ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் தேர்தல் நடந்தது. வரும் அக்டோபரில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலும் நேர்மையாக, சுதந்திரமாக, அமைதியாக நடைபெறும். இத் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.
மா.சுப்பிரமணியன்:
வரும் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று சொன்ன அமைச்சருக்கு நன்றி.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:
பாப்பாபட்டி, கீரிப்பட்டி தேர்தல் பற்றி மா.சுப்பிரமணியன் பேசி னார். கடந்த 2006-ல் சென்னை மாநகராட்சியின் 155 வார்டு களுக்கு நடந்த தேர்தலில் 99 வார்டுகளுக்கான தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அந்த அளவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வன் முறையைக் கட்டவிழ்த்து விட்ட வர்கள் திமுகவினர். எனவே, உள்ளாட்சித் தேர்தல் பற்றி பேச திமுகவினருக்கு தகுதி இல்லை.
மா.சுப்பிரமணியன்:
99 வார்டு களுக்கான தேர்தலை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது என்பது தவறானது. இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் குறித்து அதிருப்தி தெரிவித்தது. நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சென்னை மாநகராட்சி கொள்கை முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும் என அன்றைய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து 99 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்து மறு தேர்தலை சந்திக்குமாறு அன்றைய முதல்வர் கருணாநிதி எங்களுக்கு உத்தரவிட்டார்.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:
தேர்தல் முறைகேடுகள் குறித்து உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததா, இல்லையா என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.