தமிழகத்தில் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள முதல்வர் ஜெயலலி தாவுக்கு ஆளுநர் கே.ரோசய்யா பாராட்டு தெரிவித்தார்.
சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங் கியது. கூட்டத்தை தொடங்கி வைத்து ஆளுநர் ஆற்றிய உரை:
சட்டப்பேரவையின் உறுப் பினர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கத்தையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 32 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 2-வது முறை யாக ஆளுங்கட்சியை தேர்ந் தெடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக மக்கள் அளித் துள்ளனர். தங்கள் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள நம்பிக் கையை உணர்ந்து அவர்களின் முன்னேற்றத்துக்காகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபடுவீர்கள் என நம்புகிறேன்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை தமிழக மக்கள் மீண்டும் நிலைநிறுத்தி அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள் ளனர். அவரது ஆட்சியில் செயல் படுத்தி வரும் மக்கள் நலன் காக் கும் கொள்கைகளுக்கும் திட்டங் களுக்கும் மக்கள் அளித்து வரும் ஆதரவை இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு உறுதிப்படுத்தியுள் ளது.
தமிழகத்தில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற இலக்கை அடைய இந்த அரசு தொடர்ந்து பாடுபடும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு கொள்கைகளையும், திட்டங்களை யும் இந்த அரசு செயல்படுத்தும். தேர்தல் அறிக்கையில் உறுதி யளித்த திட்டங்களை நிறைவேற் றும் வகையில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே 5 முக்கிய அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
சிறு, குறு விவசாயிகள் கூட் டுறவு வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய விவசாயக் கடன் தள்ளு படி, அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம், திருமண உதவித் திட்டங்களின்கீழ் திருமாங்கல்யத்துக்கு வழங்கப் படும் தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்வு, கைத்தறி நெச வாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 200 யூனிட்களாக வும், விசைத்தறி நெசவாளர் களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 750 யூனிட்களாகவும் உயர்வு, டாஸ்மாக் மூலம் நடத் தப்படும் மதுபானக் கடைகள் திறந் திருக்கும் நேரத்தை குறைத்த துடன், 500 கடைகளை மூடல் என 5 அரசாணைகள் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளன.