தமிழகம்

மீனவர்கள் வாழ்வாதார பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

செய்திப்பிரிவு

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து ஒரு விசைப்படகில் 4 மீனவர்கள் கடலுக்குள் சென்ற னர். அவர்களை கடந்த 4-ம் தேதி நள்ளிரவில் இலங்கை கடற்படை யினர் கைது செய்து காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது கடந்த ஒரு வாரத்தில் நடந்த 3-வது சம்பவமாகும்.

தமிழக கடலோர மாவட்டங் களைச் சேர்ந்த அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வதும், கடத்திச் செல்வதும் நடக்கிறது. இது தொடர்பாக பலமுறை கடிதம் மூலம் தங்கள் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன்.

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களின் உரிமையை இலங்கையிடம் ராஜதந்திர முறைப் படி மத்திய அரசு நிலைநிறுத்த வேண்டும். மேலும், அப்பாவி தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இலங்கை கடற்படையினரால் ஏற்படும் தொடர் ஆபத்துகளால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மீனவர்களிடம் பறிமுதல் செய் யும் படகுகளை விடுவிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு உள்ளது. இதனால் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் மேலும் மோசமாகியுள்ளது. தற்போதைய சூழலில், இலங்கை கடல்பகுதியில் 90 மீன்பிடி படகுகள் பாதுகாப்பற்ற சூழலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை கடுமையாக சேதமடைந்து வருகின்றன.

எனவே, உடனடியாக வெளியுறவுத்துறைக்கு அறி வுறுத்தி, ராஜதந்திர ரீதியில் பேச்சு நடத்தி, மீனவர்கள் தங்கள் பாரம்பரிய பகுதியில் அமைதியான முறையில் மீன்பிடிக்க அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இலங்கை வசம் உள்ள 15 மீனவர்கள் மற்றும் 91 படகுகளையும் விடுவிக்க தாங்கள் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT