தமிழகம்

6 மாதங்களில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் வரை கொப்பரைத் தேங்காய் கொள்முதல்: கூட்டுறவுத் துறை மூலம் வாங்க வேளாண்துறை நடவடிக்கை

கி.கணேஷ்

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு, தென்னை விவசாயிகளிடம் 50 ஆயிரம் மெட்ரிக் டன் வரை கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய வேளாண்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், வேலூர், மதுரை, நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கொப்பரைத் தேங்காய் அதிக அள வில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு, 4 லட்சத்து 28 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி நடக்கிறது. இதனால் சாகுபடி பரப்பில் தமிழகம் 3-ம் இடத்தில் உள்ளது. சமீப காலமாக கொப்பரைத் தேங்காயின் விலை குறைந்தது. இதனால், அரசே கொப்பரைத் தேங்காயை கொள் முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில், சமீபத் தில் நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் போது, ‘கொப்பரை விலை குறையும்போதேல்லாம் விவசாயிகளிடம் இருந்து கொப் பரையை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என தேர்தல் அறிக் கையில் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.

இந்த வாக்குறுதியை நிறை வேற்றும் வகையில், கொப்பரைத் தேங்காயை அரசே கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். அதில், இம்மாதம் (ஜூன்) 15-ம் தேதி முதல், கூட்டுறவுத்துறை மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு, கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப் படும். அரவைக் கொப்பரை ஒரு கிலோவுக்கு ரூ.59.50, பந்து கொப் பரை ரூ.62.40 என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும். இது தவிர, மதிப்புக்கூட்டு வரி, ஒரு சதவீதம் சந்தைக் கட்டணம் ரத்து செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார்.

தற்போது கொப்பரை தேங் காயை கொள்முதல் செய்வதற் கான, நேரடி கொள்முதல் நிலை யங்களை அமைக்கும் பணியில் கூட்டுறவுத்துறை ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், கொப்பரைத் தேங்காய் 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்யப்படும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அரசிதழில், கொப் பரைத் தேங்காய் கொள்முதல் விவரத்தை வேளாண்துறை வெளியிட்டுள்ளது. அதில், 4.28 ஹெக்டேரில், ஹெக்டேருக்கு 11 ஆயிரத்து 661 தேங்காய் வீதம், 29 ஆயிரத்து 890 தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் தேங்காய் உற்பத்தி இருந்தாலும், ஜூன் முதல் நவம்பர் வரையில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காலகட்டத்தில் 2.62 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் உற்பத்தியாகிறது. இதில், 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய வேளாண்துறை திட்டமிட்டிருப் பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வேளாண்மை மற்றும் கூட்டுற வுத்துறை இணைந்தே இந்த கொள்முதல் திட்டத்தை செயல் படுத்துகின்றன. தென்னை விவசாயிகளை தேர்வு செய்வதும், கொப்பரை கொள்முதல் அளவை நிர்ணயிப்பதும் வேளாண்மைத் துறையின் பணியாகும். வேளாண் மைத் துறை அளிக்கும் பட்டியல் அடிப்படையில் கொள்முதல் செய்வது கூட்டுறவுத் துறையின் பணியாகும். தென்னை விவ சாயி உற்பத்தி செய்யும் கொப்பரைகளை முழுமையாக கொள்முதல் செய்ய முடியாது. வேளாண்துறை நிர்ணயிக்கும் அளவு மட்டுமே ஒரு விவசாயியிடம் இருந்து கொள்முதல் செய்ய இயலும். அப்போதுதான் எல்லா விவசாயிகளிடம் இருந்தும் கொப்பரை கொள்முதல் செய்ய முடியும். தற்போது இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT