தமிழகம்

அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான வழக்கு தள்ளுபடி

செய்திப்பிரிவு

மதுரையைச் சேர்ந்த வழக்கறி ஞர் ஏ.கண்ணன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத் துக்கு தனி ஆணையம் அமைக்க கோரியிருந்தார்.

தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி நூட்டி ராமமோகனராவ் ஆகியோர் நேற்று மனுவை விசாரித்தனர். அப்போது, சிறப்பாக செயல்படு வார்கள் என்ற நம்பிக்கை வைத்தே அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த நியமனம் தொடர்பாக கேள்வி எழுப்ப முடியாது. மேலும் மனுதாரர் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்ற அரசு வழக்கறிஞர் நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

SCROLL FOR NEXT