உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என பி.எஸ்.ஞானதேசிகன் புதன்கிழமை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடப்போவதாக வியாழக் கிழமை மதுரையில் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியா ளர்களிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் பேசியதாவது: ‘’மேயர் மற்றும் தலைவர் பதவிக்கான தேர்தலில் மட்டுமே போட்டியில்லை என்றுதான் நேற்று தெரிவித்தேன்.
ஆனால், காங்கிரஸ் ஒட்டு மொத்தமாக புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகிவிட்டது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மட்டும் காங்கிரஸ் போட்டியிடவில்லை. மற்றபடி வார்டுகள் உள்ளிட்ட இதர பதவிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் இது குறித்த அதிகாரம் அந்தந்த வட்டார காங்கிரஸ் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சி தேர்தலில் தோற்ற வர்களைக்கூட வெற்றி பெற்ற வர்களாக அறிவித்தனர். அதே பாணியை அதிமுக-வும் கடைப் பிடிக்கலாம் என்பதால்தான் நாங்கள் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடவில்லை’’ என்றார்.