தமிழகம்

போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

செய்திப்பிரிவு

குடிநீர் பிரச்சினையை போக்க போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்கப்படும். சென்னை யில் குடிநீர் தளங்களை கண் டறிய அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது என்று அமைச் சர் எஸ்.பி.வேலுமணி தெரி வித்தார்.

தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் போதிய நீர் கிடைக்க வில்லை. இதன் மூலம் குடிநீர் தட்டுப்பாட்டுக்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, குடிநீர் விநி யோகம் தொடர்பாக ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னையில் தற்போது ஏரி களில் உள்ள தண்ணீர் மூலம் பிப்ரவரி மாதம் வரையில் பிரச்சினை இல்லை. அதன்பின்னும் சமாளிக்கலாம். மேலும், விவ சாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் சாதாரணமாக 4 ஆயிரம் நடைகள் தண்ணீர் வழங்கப்படும். வறட்சி காலத்தில் 6 ஆயிரத்து 500 நடைகள் வரை தினசரி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மதுரையிலும் வைகையில் தண்ணீர் குறைந்துள்ளது. தேவையான குடிநீர் அளவு தொடர்பாகவும் ஆலோசித்துள்ளோம். கண்டிப்பாக இந்த அரசு போர்க்கால அடிப் படையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத் தில் ஏற்கெனவே உள்ள இரண்டில் போதுமான நீர் பெறப்படுகிறது. புதிய திட்டங்களில் 150 மில்லியன் லிட்டர் திட்டத்துக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அடுத்து 400 மில்லியன் லிட்டர் திட்டத்துக்கு ஒப்புதல் பெறும் பணிகள் நடந்து வருகின்றன. பொதுமக்கள் குடி நீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீரை பூங்கா, செடி கொடிகள், மரங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

மேலும், குடிநீரை சீராக விநியோ கிக்கும் வகையில் அலுவலர்களுக் கும் சில அறிவுறுத்தல்களை அமைச்சர் வழங்கியுள்ளார்.

இதன்படி, பொதுமக்களுக்கு தேவைக்கேற்ப குளோரின் கலந்த பாதுகாப்பான குடிநீரை விநியோ கிக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறுகள் அனைத்திலும் தர மான நீர் ஆதாரம் உள்ளதை உறுதிப்படுத்தி, பயன்படுத்தும் நிலையில் தயாராக வைக்க வேண்டும். மின் மோட்டார்கள் வைத்து குடிநீரை உறிஞ்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழாய் மூலம் குடிநீர் செல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும்.

சென்னை மாநகர்

தனியார் விவசாய நிலங்களில் இருந்து தண்ணீர் எடுத்து விநியோகிக்க தளங்களை கண் டறிய வேண்டும். பயன்பாட்டில் இல்லாத பொதுக் கிணறுகளை சுத்தப்படுத்தி, குடிப்பதற்கு தகுதியானது என சான்று பெற்று பயன்படுத்த வேண்டும். நீராதாரம் முற்றிலும் குறையும் பகுதிகளில் தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அறிவுறுத் தினார்.

கூட்டத்தில், நகராட்சி நிர்வா கத்துறை செயலர் பணீந்திர ரெட்டி, குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் தீரஜ்குமார், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ், பேரூராட்சிகள் இயக்குநர் க.மகரபூஷணம், சென்னை குடிநீர் மேலாண் இயக்குநர் அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT