வெப்ப சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும்.
தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆரணி, கேவிகே காட்டுக்குப்பத்தில் தலா 40 மில்லி மீட்டர், மகாபலிபுரம், உத்திரமேரூர், மரக்காணம் ஆகிய இடங்களில் தலா 20 மில்லி மீட்டர், செய்யாறு, தாம்பரத்தில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.