தமிழகம்

பாடகி சுசித்ரா மீது காவல் ஆணையரிடம் புகார்

செய்திப்பிரிவு

பாடகி சுசித்ராவைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய தேசிய லீக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் ஏ.எம் ரசூல் மைதீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நடிகர், நடிகைகள் பற்றிய அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சுசித்ரா கார்த்திக், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இளைஞர்களின் எண்ணத்தைத் தூண்டும் வகை யில் அவர் இப்படி பதிவிட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

நடிகர், நடிகைகளை சமூக வலைதளங்களில் பின்பற்றக் கூடிய இளைஞர்கள் பலர் இருப்பார்கள். சுசித்ரா வெளி யிடும் பாலியல் ரீதியிலான புகைப்படங்கள், வீடியோக் களால் இளைஞர்கள் வழி தவற வாய்ப்பு ஏற்படுகிறது. ஆகையால் காவல்துறை ஆணையர், சுசித்ரா கார்த்திக் மீது சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

SCROLL FOR NEXT