தமிழகம்

குண்டர் சட்டத்தில் விஜயகாந்தை கைது செய்ய உயர் நீதிமன்றத்தில் மனு

செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை குண்டர் தடுப்புக் காவல் சட்டத் தில் கைது செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மதிச்சியத்தை சேர்ந்தவர் ஏ.ஜெயராமன். இவர் மதுரை ஜெயலலிதா இலவச சட்ட உதவி மையத்தின் செயலராக உள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜெயராமன் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:

தேமுதிக தலைவர் விஜய காந்த், தொடர்ந்து பொது அமை திக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். அவர் பொது இடங்களில் மக்கள் மத்தியில் பயத்தையும், அச்சத் தையும் ஏற்படுத்தி வருகிறார். விஜயகாந்தின் செயலால் தமிழ கத்தில் பாதுகாப்பற்ற சூழல் இல் லாதது போன்ற தோற்றம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது.

மேலும் விஜயகாந்த் மீது மாநிலம் முழுவதும் பல காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கடுமையானவை.

இருப்பினும் அவர் தொடர்ந்து கடுமையான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டு வருகிறது.

சாதாரண குற்றச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதன் மூலம் விஜயகாந்த் செயல்பாட்டை தடுக்க முடியாது. எனவே, விஜயகாந்தை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். குண்டர் சட்டத்தில் கைது செய்யாவிட்டால் அவர் தொடர்ந்து இதுபோன்ற குற்றங் களில் ஈடுபடுவார்.

உள்துறை செயலருக்கு மனு

அவரை குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்யக்கோரி 1.1.2016-ல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், உள்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். எனவே என் மனு அடிப்படையில் விஜய காந்தை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட வேண்டும் எனக் கூறப்பட் டிருந்தது.

இந்த மனு விரைவில் விசார ணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT