தற்காலிக ஊழியர்களுக்கு ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அஞ்சல் துறை ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள் ளனர்.
அஞ்சல் துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தற்காலிக ஊழியர்களுக்கு 6 மற்றும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் காலவரை யற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அலுவலகத்தில் தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம், அஞ்சல் ஆர்எம்எஸ் இணைப்புச் சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன் தலைமையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இப்போராட்டத்தில் மாநிலங் களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.துரை பாண்டியன், தபால் கணக்கு மாநில செயலாளர் ஆர்.பி. சுரேஷ் ஆகியோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.