தமிழகம்

வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்யும்

செய்திப்பிரிவு

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒருசில இடங்களில் மழையோ இடியுடன்கூடிய மழையோ பெய்யக் கூடும். சென்னையில் சில இடங் களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாறில் 30 மில்லி மீட்டரும், வால்பாறையில் 20 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

“அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வெப்பச்சலனம் காரண மாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் சில இடங்களில் மழையோ இடியுடன்கூடிய மழையோ பெய்யக் கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT