தமிழகம்

முதல்வராக பதவியேற்று 100-வது நாள்: பேரவையில் ஜெ.வுக்கு வாழ்த்து

செய்திப்பிரிவு

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்று நேற்றுடன் 100 நாட்கள் நிறைவு பெற்றன. இதையொட்டி தலைமைச் செயலக நுழைவாயிலின் இரு புறமும் வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. முதல்வர் ஜெயலலிதா செல்லும் பாதை வண்ண மலர்களால் அலங்கரிக் கப்பட்டிருந்தது.

சட்டப்பேரவையிலும் முதல் வர், பேரவைத் தலைவரின் இருக்கைகள் உள்பட அவை முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச் சர்கள், முதல்வரின் 100 நாள் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு தங்கள் பதிலை கூறினர்.

பேரவையில் நேற்று பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை மற் றும் ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச் சர்கள் எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி இருவரும் முதல்வரின் 100 நாள் சாதனைகளை பட்டிய லிட்டனர்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி பேசிக் கொண்டிருந்தபோது, முதல்வர் ஜெயலலிதா பேரவைக்கு வந் தார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மேஜையை பலமாக தட்டி தங்களது வாழ்த்தை தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT