முக்குலத்தோர் புரட்சிப் படை என்ற கட்சியை நடத்தி வருகிறார் நடிகர் கருணாஸ். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்ததை தொடர்ந்து சசிகலா அணிக்கு கருணாஸ் ஆதரவு தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் நேற்று தொண்டி யிலிருந்து திருவாடானை வரும் வழியில் அடையாளம் தெரியாத நபர்கள் கருணாஸ் கார் மீது கால ணியை வீசி எதிர்ப்பு தெரிவித் தனர். ஓ.பி.எஸ். மற்றும் தீபா ஆதரவாளர்கள் சிலர் காலணி வீசியதாக திருவாடனை காவல்நிலையத்தில் கருணாஸ் புகார் அளித்தார். இதையடுத்து காலணி வீசிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.