நாடுமுழுவதும் கடந்த 2016-ம் ஆண்டில் சிக்குன்குனியாவால் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2006-ம் ஆண்டு சிக்குன்குனியா காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகம், ஆந்திரா, கேரளாவில் தொடங்கிய சிக்குன்குனியா அடுத்தடுத்த ஆண்டுகளில் நாடுமுழுவதும் பரவத் தொடங்கியது. தற்போது டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் சிக்குன்குனியாவால் பாதிக் கப்பட்டவர்கள் அதிகப்படியான காய்ச்சல், கை, கால்களின் மூட்டுக்களில் ஏற்படும் வலியால் அவதிப் பட்டனர்.
நோயின் தீவிரத்தால் ஏராள மானோர் உயிரிழந்தனர். இதை யடுத்து சுகாதாரத்துறை எடுத்த தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகம், ஒடிசா, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு குறையத் தொடங்கியது. ஆனால் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண் ணிக்கை அதிகரித்தது. டெல்லியில் கடந்த சில மாதங்களில் மட்டும்
சிக்குன்குனியாவால் ஆயிரக்கணக் கானோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். டெல்லி உட்பட நாடுமுழுவதும் சிக்குன்குனியா பாதிப்பை கட்டுப்படுத்தவும், பாதிக் கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக் கைகளையும் சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.
கர்நாடகா முதலிடம்
இந்நிலையில் கடந்த ஆண்டு (2016) ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 25-ம் தேதி வரையிலான சிக்குன்குனியா பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில், 2016-ம் ஆண்டில் நாடுமுழுவதும் 57 ஆயிரத்து 694 பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டி லேயே அதிகபட்சமாக கர்நாட காவில் 13 ஆயிரத்து 239 பேரும், டெல்லியில் 12 ஆயிரத்து 221 பேரும், மகாராஷ்டிராவில் 7 ஆயிரத்து 354 பேரும், ஹரியாணாவில் 5 ஆயிரத்து 336 பேரும், பஞ்சாப்பில் 4 ஆயிரத்து 299 பேரும் சிக்குன்குனியாவால் பாதிக்கப் பட்டனர்.
தமிழகத்தில் 72 பேரும், ஆந்திராவில் 924 பேரும், கேரளாவில் 123 பேரும் பாதிக்கப்பட்டி ருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு எவ்வளவு பேர் உயிரிழந் துள்ளனர் என்ற விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிடவில்லை. கடந்த சில ஆண்டுகளைவிட 2016-ம் ஆண்டில் அதிகபட்ச மாக நாடுமுழுவதும் சிக்குன் குனியாவால் 57 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட் டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.