சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளிக்க பிப்ரவரி 23-ம் தேதி அன்று குடியரசுத் தலைவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
ஸ்டாலினுடன் துரைமுருகன், திருச்சி சிவா உள்ளிட்டோர் செல்கின்றனர். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிப்ரவரி 23-ம் தேதி மாலை 6.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற சட்டவிரோத அராஜகங்கள் குறித்து இந்திய குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க உள்ளோம். சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளோம். நேரம் கிடைத்தவுடன் சந்திப்போம் என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில், பிப்ரவரி 23-ம் தேதி அன்று குடியரசுத் தலைவரை ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.