தமிழகம்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்பட 6 பேருக்கு விடுதலைச் சிறுத்தைகள் விருது: திருமாவளவன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்பட 6 பேருக்கு 2017-ம் ஆண்டுக் கான விடுதலைச் சிறுத்தைகள் விருதுகள் வழங்கப்படவுள்ளன என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்த ஆண்டு புதுச் சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அம்பேத்கர் சுடர் விருது, கவிஞர் ஓவியாவுக்கு பெரியார் ஒளி விருது, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றனுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி தியாகராசனுக்கு காமராஜர் கதிர் விருது, இஸ்லாமிய விழிப்புணர்வு கழகத்தைச் சேர்ந்த மெளலவி தர்வேஷ் ரஷாதிக்கு காயிதே மில்லத் பிறை விருது, தமிழறிஞர் இளங்குமரனாருக்கு செம்மொழி ஞாயிறு விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மே 4-ம் தேதி நடைபெறும். இவ்வாறு திருமாவளவன் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT