தமிழகம்

விளிம்புநிலை சமூகத்தினர் மேம்பாட்டுடன் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கானதாக தமிழக பட்ஜெட் அமைய வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையில் வரும் 21-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட், விளிம்புநிலை சமூகத்தினரின் மேம்பாட்டுடன் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அமைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

உள்ளாட்சித் தேர்தலை மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்தே சந்திக்கும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, பாஜகவின் காவிமயக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் முயற்சியாகும். வரும் 21-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை அடிப்படையாக வைத்து சில கவர்ச்சி அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும். ஆனால், அப்படி அல்லாமல் விளிம்புநிலை சமூகத்தினரின் மேம்பாட்டுடன் இணைந்த ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அது அமைய வேண்டும். பொது நிதிநிலை அறிக்கை என்ற பெயரில் பொத்தாம் பொதுவாக தாக்கல் செய்யாமல் பழங்குடியினர், தலித், பெண்கள் என்று தனித் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. குறிப்பாக, நலிவடைந்து வரும் விவசாயத்தை மேம்படுத்த தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

கூலிப்படை கலாச்சாரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழகத்தில் நிலவும் கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலை நிறுத்த, அனைத்துக் கட்சிக் குழுவை தமிழக அரசு, டெல்லிக்கு அனுப்பி பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தச் செய்ய வேண்டும். மதச்சார்பின்மைக்குக் கேடு விளைவிக்கும் வகையில் தபால் அலுவலகங்கள் மூலம் கங்கை நீர் விற்பனை செய்வதை உடனே திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT