கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் என்று மரியாதை கொடுக்காமல் மு.க.ஸ்டாலின் அவைக் காவலர்களால் தாக்கப் பட்டிருப்பது கண்டனத்துக் குரியது. அதிமுகவின் அனைத்து சட்டபேரவை உறுப்பினர்களும் சுதந்திர மாக இருக்கின்றார்கள் என்றால் பேரவை தலைவர் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதில் என்ன பிரச் சினை இருக்கிறது என்று தெரியவில்லை.
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். சட்டப்பேரவையில் எதிர்க் கட்சிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு நம் பிக்கை வாக்கெடுப்பு எடுத் திருப்பது எந்தவிதத்தில் நியாயம்?
தமிழக ஆளுநர் உடனடியாக இந்த பிரச்சி னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். மக்கள் விரும்பாத ஒரு ஆட்சியை வலுக்கட்டாய மாக பேரவைத் தலைவர் திணித்திருக்கிறார். இதற்கான எதிர்ப்பையும், தாக் கத்தையும் காலம் உணர்த் தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.