தமிழகம்

போராட்டத்தை விரிவுபடுத்த வழக்கறிஞர்கள் முடிவு

செய்திப்பிரிவு

உண்ணாவிரதம், மறியல் என தொடர் போராட்டங்களில் வழக்கறி ஞர்கள் ஈடுபடுவார்கள் என மதுரை யில் நடைபெற்ற போராட்டக் குழு செயற்குழுவில் முடிவெடுத் துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறி ஞர்கள் கூட்டமைப்பின் போராட்டக் குழு செயற்குழு கூட்டம் மதுரை யில் நேற்று நடைபெற்றது. கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் திரு மலைராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வழக்கறிஞர்களுக்கான சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறும்வரை வேலைநிறுத்தம் தொடரும். உச்ச நீதிமன்றம் முன்பாக விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் 50 ஆயிரம் வழக்கறிஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர். வரும் 9-ம் தேதி முதல் நீதிமன்றங்கள் முன்பு மறியல் மற்றும் உண்ணா விரதம் என பலகட்டப் போராட் டங்கள் நடத்தப்படும் என்றார்.

SCROLL FOR NEXT