மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தின்படி, மாதம் ஒன் றுக்கு தலா பத்து டோக்கன்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர், அக் டோபர், நவம்பர் மாதத்துக்கான கட்டண மில்லா டோக்கன்கள் வரும் 22-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன. இதேபோல், தற்போது 60 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் குடும்ப அட்டையை சமர்ப்பித்து, புதிதாக பயண புகைப்பட அடையாள அட்டை மற்றும் கட்டண மில்லா டோக்கன்களைப் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.