தமிழகம்

வேளாங்கண்ணியில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை யொட்டி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் பைபிள் ஏந்தியபடி வந்த ஊர்வலம், விண்மீன் ஆல யத்தை வந்தடைந்ததும் முதலில் நன்றி வழிபாடு நடைபெற்றது. நடந்து முடிந்த 2016-ம் ஆண்டில் கடவுள் செய்த நன்மைகளுக்காக நன்றி செலுத்தப்பட்டது.

இதையடுத்து, இரவு 11.45 மணியளவில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், பல்வேறு மொழிகளில் திருப்பலியை நடத்தி வைத்தார். இதில் உலக சமாதானத்துக்காக சிறப்பு ஜெபம் நடைபெற்றது.

புத்தாண்டில் இருள் அகன்று உலகெங்கும் ஒளி வீசட்டும் என் பதை வலியுறுத்தியும், புத்தாண்டை வரவேற்கும் வித மாகவும் குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு நடைபெற்றது. இதில், பேராலய அதிபர் பிரபாகர் அடி களார், பங்குத்தந்தை சூசை மாணிக்கம், உதவிப் பங்குத் தந்தை ஆரோக்கியசுந்தரம் உள் ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT