தமிழகம்

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி ஏற்கெனவே எதிர்பார்த்ததே: முரளிதர ராவ்

நிஸ்துலா ஹெப்பர்

தமிழக அரசியலில் அதிமுக கட்சியினுள் இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி ஏற்கெனவே எதிர்பார்த்ததே, என்று தமிழக விவகார பாஜக பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு கூறியதாவது:

நாம் இந்த அதிகாரப் போட்டியினை சுயநலம் சார்ந்த விவகாரமாகவே புரிந்து கொள்ள வேண்டும். தனக்குப் பிறகு யார் என்பதை தெரிவிக்காமலேயே ஜெயலலிதா போன்ற தலைமை கொண்ட ஒற்றை ஆளுமைக் கட்சியில் இத்தகைய அதிகாரப் போட்டிகள் ஏற்படுவது இயல்பானதே, எதிர்பார்க்கக் கூடியதே” என்றார்.

அதிமுகவின் ஒரு கோஷ்டியினரை குறிவைத்து ரெய்டுகள் நடைபெறுவது பற்றி முரளிதர ராவ் கூறும்போது, “ரெய்டுகள் வழக்கமானதுதான், சென்னையில் மட்டுமல்ல நாடு முழுதுமே இத்தகைய வருமான வரிச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி கொண்ட அமைப்பு ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்துள்ளது. ஏனெனில் அங்கு முறைகேடுகள் நடந்திருப்பதற்கான பெரிய ஆதாரங்கள் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. ஒரு கோஷ்டியின் தலைவர் ஒருவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டின் தன்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் தங்கள் அரசியலில் நம்பகத்தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் கடைபிடிக்காதவர்கள். எனவே அவர்கள் பிரச்சினைகளுக்கெல்லாம் பாஜக-வை குற்றம் சாட்டுவது சரியல்ல. தமிழ்நாட்டில் நடந்து வரும் அரசியல் விவகாரங்களை கூர்ந்து கவனித்து வருகிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT