தமிழகம்

மின்வெட்டை சமாளிக்க மின் அலுவலகங்களில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க முடிவு

செய்திப்பிரிவு

மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க மின்வாரிய அலுவலகங்களில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோடை வெயில் உக்கிரம் அடைந் துள்ளதையடுத்து மின்நுகர்வு அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க மின்வாரியம் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. குறிப்பாக, சூரியமின் சக்தியை அதிகளவு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள் ளது. மத்திய, மாநில அரசுகள் சூரிய மின்சக்தியை வீடுகள், அலுவலகங்களில், தொழிற்சாலை களில் அமைக்க மானியம் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் தனியார் சூரியசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழக அரசு கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகங்களில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 9 மண்டல தலைமை பொறியாளர் அலுவலகங்கள், 21 மின்பகிர்மான வட்ட அலுவலகங்களில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு அலுவலகத்திலும் 10 முதல் 20 கிலோவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்படும். ஒரு கிலோவாட் திறனில் 5 யூனிட் மின்சாரம் கிடைக்கும் என மின் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT