தனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாகவும், மிரட்டல் விடுப்பது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
கடந்த 7-ம் தேதி முதல் அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இருதரப்பாக பிளவுப்பட்டு பல்வேறு கருத்துகளும், பேட்டிகளும் பரவிக் கிடக்கின்றன. ஆட்சி அமைக்க உரிமை கோரி சசிகலாவும், தனது நிலைப்பாட்டை ஓபிஎஸ்.ஸும் ஆளுநரை சந்தித்துத் தெரிவித்துவிட்டனர். ஆனால்,
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான சி.ஆர்.சரஸ்வதி, "எனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருகின்றன. மிரட்டல் விடுப்பது ஓபிஎஸ் ஆதரவாளர்கள்தான். தொலைபேசியில் அழைத்தும் குறுஞ்செய்தி வாயிலாகவும் பல்வேறு மிரட்டல்கள் வருகின்றன. அதனால் எனது செல்போனை அனைத்து வைத்துள்ளேன்.
இது தொடர்பாக காவல்துறையில் புகாரும் அளித்திருக்கிறேன். போயஸ் கார்டனில் சசிகலாவுக்கு ஆதரவாக நிற்பவர்கள் மட்டுமே உண்மையான அதிமுகவினர். சசிகலாவுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது. விரைவில் ஆட்சி அமைப்போம்" என்றார்.