தமிழகம்

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது மருத்துவமனை நிர்வாகம் அளித்த குறிப்புகளையே நாங்களும் நம்பினோம்: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

செய்திப்பிரிவு

மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது மருத்துவர் கள் மற்றும் மருத்துவமனை நிர் வாகம் அளித்த குறிப்புகளை கட்சியின் செய்தித் தொடர்பாளர் கள் வெளியிட்டனர். அதையே நாங்களும் நம்பினோம் என, முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியின் மகன் திருமண விழாவில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படங்களை வெளியிடுவோம் என, கர்நாடக மாநில அதிமுக அம்மா கட்சி செயலாளர் புகழேந்தி கூறியுள் ளார். அவர் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஜெயலலிதா மரணம் தொடர் பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக் கையை மு.க.ஸ்டாலின் விமர் சனம் செய்கிறார். அரசியல் கார ணத்துக்காக யாரும் சிந்திக்காத கருத்துகளை கூறுவது மு.க.ஸ்டா லினுக்கு வாடிக்கை.

நான் முதல்வராக இருந்த போதே, ஜெயலலிதாவுக்கு அளிக் கப்பட்ட சில சிகிச்சை முறைகள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என, அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தியுள்ளேன். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது யாராலும் பார்க்க முடியாத சூழ்நிலை உருவாக்கப் பட்டிருந்தது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் அளித்த குறிப்புகளை, கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் வெளி யிட்டனர். அதையே நாங்களும் நம்பினோம்.

ஜெயலலிதாவின் மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்மங்கள், சந்தேகங் கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என பொதுமக்களும், தொண்டர்களும் விரும்புகின்றனர். அதைத்தான் நாங்கள் வலியுறுத்து கிறோம் என்றார்.

குழு கலைக்கப்படவில்லை

முன்னாள் அமைச்சர் க.பாண்டி யராஜன் கூறும்போது, ‘‘தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க வேண் டும். அப்போதுதான் தொண்டர் களின் உண்மையான நிலை தெரி யும். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கு கிறார்.

முதல்வர் பழனிசாமி அணியினர் எங்களது நிபந்தனைகளை நிறை வேற்றினால் பேச்சுவார்த்தை தொடங்கும். பேச்சுவார்த்தைக் காக அமைக்கப்பட்ட குழு கலைக் கப்படவில்லை’’ என்றார்.

முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் இரா.விஸ்வ நாதன், எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT