தமிழகம்

இந்தியன் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் பொறுப்பேற்பு

செய்திப்பிரிவு

இந்தியன் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கிஷோர் காரத் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு இவர் ஐடிபிஐ வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும், யூனி யன் வங்கியின் செயல் இயக்கு நராகவும் பதவி வகித்துள் ளார்.

பாங்க் ஆப் பரோடா வங்கியில் முதன்முதலாக பணியில் சேர்ந்த இவர் இத்துறையில் 37 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அகமதாபாதில் உள்ள தொழில்முனைவோர் வளர்ச்சி மையத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

பாங்க் ஆப் பரோடா வங்கியில் பணிபுரிந்தபோது, மேற்கிந்திய தீவு நாடான டிரினிடாட் டொபாகோவில் தொழில், வர்த்தக சபையை உருவாக்கினார் என்பது குறிப் பிடத்தக்கது.

SCROLL FOR NEXT