காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேட்டைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேரை மீன்பிடி படகில் ஹெராயின் போதைப் பொருளை கடத்தியதாக கடந்த 1-ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், இலங்கை கடற்படையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த 8-ம் தேதி முதல் காரைக்கால் கடற்கரை சாலையில் தொடர் அறப்போராட்டத்தில் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திடீர் நெஞ்சுவலி
இந்நிலையில், நேற்று நடை பெற்ற தொடர் அறப்போராட்டத்தில் பங்கேற்ற காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மனைவி ஏலாச்சி(55) என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக காரைக் கால் அரசு பொது மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்ட அவர், அங்கு சிகிச்சை பல னின்றி இறந்தார். இவர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட் டுள்ள மீனவர்கள் கஜேந்திரன், தமிழ்மணி ஆகியோரது உறவினர் ஆவார்.