நீதிமன்ற உத்தரவுப்படி அமல்ப டுத்தப்படும் புதிய விதிமுறைகளால் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சிவகா சியில் பட்டாசு ஆலைகளும், கடைகளும் பிப். 20-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் அடைக்க ப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும், 500-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகளும் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு சிவகாசி, திருச்சி, கரூரில் அடுத்தடுத்து பட்டாசுக் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, பட்டாசுக் கடைகளுக்கான விதி முறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பட்டாசுக் கடைகளுக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்த, மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறைக்கு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பா டுகளை தவிர்த்து பட்டாசுக் கடைகளுக்கு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. இப்புதிய விதிமுறைகளை நடை முறைப்படுத்தினால், தற்போது உள்ள பட்டாசுக் கடைகளில் 99 சதவீத கடைகளை மூடும் நிலை ஏற்படும் என்பதால் பட்டாசு உற்பத்தியாளர்களும், பட்டாசு விற்பனையாளர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி, பொதுச் செயலர் மாரியப்பன் உள்ளிட்டோர் நேற்று அளித்த பேட்டியின்போது, நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசுக் கடைகளுக்கான பல்வேறு விதிமுறைகள் உருவாக்கப்பட் டுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளை, அதி காரிகள் முறையாகச் செயல் படுத்தினாலேயே விபத்துகளை தடுக்க முடியும். தற்போது கொண்டு வரப்படும் புதிய விதிமுறைகளால் பட்டாசுக் கடைகள் மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப் பாட்டுத்துறை அமல்படுத்தும் புதிய விதிமுறைகளுக்கு எதிர் ப்பு தெரிவிக்கும் வகையில், வரும் திங்கள்கிழமை முதல் (பிப்.20) அனைத்து பட்டாசுக் கடைகளையும், ஒரு சில ஆலை களையும் அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்ப னையாளர்கள் திட்ட மிட்டுள்ளனர்.