தமிழகம்

சென்னை ஆட்சியர் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் சேலம் ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாற்றப்பட்டவர்கள் பெயர் தற்போது வகிக்கும் பதவி உட்பட:

1. அரியலூர் மாவட்ட ஆட்சியராகப் பதவி வகிக்கும்  விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

2.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டிஜி வினய் அரியலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

3. சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

 4.வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ் சி ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

5.சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சென்னை இசைப் பல்கலைக்கழக பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்.

6.சென்னை இசைப் பல்கலைக்கழக பதிவாளர் சீதாலட்சுமி சென்னை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

7. தமிழ்நாடு தேர்தல் ஆணைய செயலர் டி.எஸ். ராஜசேகர்  மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT