தமிழகம்

10 ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சி; சிவகங்கை அருகே காலியாகும் கிராமம்

இ.ஜெகநாதன்

சிவகங்கை அருகே 10 ஆண்டு களாக நீடிக்கும் வறட்சி, தண்ணீர் இல்லாதது போன்ற காரணங்க ளால் 7 தலைமுறைகளாக வாழ்ந்த கிராமத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

சிவகங்கை அருகே வல்லனேரி ஊராட்சி உச்சப்புளியில், 70 குடும்பங்கள் வசித்தன. அவர்கள், விவசாயிகளாகவும், கூலித் தொழி லாளர்களாகவும் வாழ்ந்து வந்த னர். 2 கண்மாய்கள் மூலம் 80 ஏக்க ரில் விவசாயம் செய்து வந்தனர். அங்குள்ள ஊருணியை குடிநீர் ஊருணியாகப் பயன்படுத்தி வந்த னர். மேலும் கோடைகாலத்தில் குடி நீர் பிரச்சினையைத் தீர்க்க சமுதா யக் கிணறும் தோண்டப்பட்டது.

இந்த ஊருணி, கிணற்றில் இருந்து பக்கத்து கிராம மக்களும் குடிநீர் எடுத்து வந்தனர். செழிப்பாக இருந்த இந்த கிராமத்தில், கடந்த 10 ஆண்டுகளாக மழைப் பொழிவு இல்லை. தொடர் வறட்சியால் அனைவரும் விவசாயத்தை கைவிட்டனர். இதனால் தற்போது 80 ஏக்கர் நிலம் தரிசாக விடப் பட்டுள்ளது.

ஊருணியிலும் சொட்டு தண்ணீர் கூட இல்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இல்லாததால் குடிநீர் இணைப்பும் கிடையாது. பஸ் வசதி இல்லை. அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால், வருடத்தில் பாதி நாட்கள் இருளில்தான் இருக் கும். இதனால் இரவு நேரங்களில் வீடுகளிலேயே முடங்குகின்றனர். வறட்சி, அடிப்படை வசதி இல்லாததால் பலரும் பிழைப்புக் காக குடும்பத்துடன் வெளியூர்க ளுக்கு குடிபெயர்ந்தனர். தற்போது, 15 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின் றன. அவர்களும் வெளியூர்களுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, அக்கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் கூறியதாவது: நான் சிறுவயதாக இருக்கும்போது எப்போதும் விவசாயப் பணிகள் நடந்து கொண்டே இருக்கும். ஊருணியும், கிணறும் இருந்ததால் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் வாழ்ந்து வந்தோம்.

எங்கள் ஊரில்தான் சுற்றுப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து சென்றனர். காலப்போக்கில் தொடர் வறட்சி யால் விவசாயம் பொய்த்தது. ஊருணி, கிணறு வறண்டது. குடிநீர் தந்த கிணற்றையும் மேற்கொண்டு ஆழப்படுத்த முடியவில்லை. 10 ஆண்டுகளாக தண்ணீர் கிடைக்காத ஊராக மாறிவிட்டது. தொடர்ந்து மனு கொடுத்ததால் ஒரு சின் டெக்ஸ் தொட்டி மட்டும் வைத்து சென்றனர். குறை மின்னழுத்தத் தால் அதிலும் தண்ணீர் பிடிக்க முடியவில்லை.

அப்படியே தண்ணீர் வந்தாலும் ஓட்டையாக இருப்பதால் ஒழுகிவி டும். எந்த வசதியும் இல்லாததால் ஒவ்வொரு குடும்பமாக வெளியேறி வருகின்றனர். இதேநிலை நீடித் தால், 7 தலைமுறைகளாக வாழ்ந்த எங்கள் கிராமத்தில், ஒருவர் கூட இல்லாத நிலை ஏற்படும் என்றார்.

SCROLL FOR NEXT