தமிழகம்

கல்வி அதிகாரி அலுவலகம் முற்றுகை: மடிக்கணினி பழுது என மாணவர்கள் புகார்

செய்திப்பிரிவு

பள்ளியில் வழங்கப்பட்ட, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் பழுதடைந்திருப் பதாகக் கூறி கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம், கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த (2013-14) கல்வியாண் டில் பிளஸ்-2 பயின்ற 240 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் வியாழக்கிழமை வழங்கினார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சில மடிக்கணிகள் பழுதடைந்துள்ளதாகவும், சார்ஜ் நிற்பதில்லை என்றும் குற்றம்சாட்டி திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை மாணவ, மாணவியர் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், எல்காட் நிறுவனத்தின் மடிக்கணினிகள் தான் மாணவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளன. மடிக்கணினியில் பிரச்சினைகள் இருந்தால் அதைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். திருப்பூரில் உள்ள எல்காட் நிறுவனத்தின் சர்வீஸ் மையமான அவிநாசி சாலை, ராம் நகர் பகுதியில் உள்ள ‘ஸ்டாப் சர்வீஸ்’ மையத்தில் மாணவ, மாணவியர் தங்களது மடிக்கணினியில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, மாணவ, மாணவியர் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT