தமிழகம்

திருவல்லிக்கேணி ஜி.ஹெச்.சில் அம்மா உணவகம் நாளை திறப்பு: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

செய்திப்பிரிவு

சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் - சேய் நல மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள அம்மா உண வகத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை திறந்து வைக்கிறார்.

சென்னை மாநகராட்சி சார்பில் வார்டுக்கு ஒன்று வீதம் 200 வார்டுகளிலும் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் 7 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகம் திறக்க மாநகராட்சி திட்டமிட்டது. முதல்கட்டமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுமார் 5 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட அம்மா உணவகம் கடந்த ஆண்டு நவம்பரில் திறக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது.

திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் - சேய் நல மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராய புரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவ மனையில் அம்மா உணவகத்துக்கு கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்தன. திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி தாய் - சேய் நல மருத்துவமனையில் அம்மா உணவ கத்தை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாளை தொடங்கிவைக்கிறார்.

SCROLL FOR NEXT